தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கடவுளே!! காட்டு யானை தாக்கியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு..!

அடக்கடவுளே!! காட்டு யானை தாக்கியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு..!

Oh my god!! Biker killed in wild elephant attack Advertisement

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடம்பூர் மலைப்பகுதி ஏலஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி.

சம்பவத்தன்று பழனிச்சாமி தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் குன்றி  மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அஞ்சனை பிரிவு அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மாமரத்து பள்ளம் பிரிவு அருகே இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போது புதர் மறைவில் இருந்த ஒற்றைக் காட்டு யானை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென சாலையில் அவர்கள் முன் வந்து நின்றது.

Elephant attack

இதனை கண்டு திகைத்துப் போன பழனிச்சாமி மற்றும் அவரது நண்பர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்ற போது அந்த காட்டு யானை ஆனது அவர்களை துரத்தி தாக்கியதில் பழனிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Elephant attack #dead #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story