×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"அவன் கூட பேசாதன்னு சொன்னா கேக்க மாட்டியா..." கல்லூரி மாணவி படுகொலை.!! போலீசில் சரணடைந்த 19 வயது இளைஞர்.!!

அவன் கூட பேசாதன்னு சொன்னா கேக்க மாட்டியா... கல்லூரி மாணவி படுகொலை.!! போலீசில் சரணடைந்த 19 வயது இளைஞர்.!!

Advertisement

மதுரை அருகே நர்சிங் மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் 19 வயது இளைஞர் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக ஜெயசூர்யா என்ற இளைஞர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசியை சேர்ந்தவர் பிரதிபா. நர்சிங் கல்லூரி மாணவியான இவர், மதுரை ஊமச்சிகுளம் அருகேயுள்ள சின்ன மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசூர்யா என்ற 19 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஜெயசூர்யா வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்திருக்கிறார். இது தொடர்பாக இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் பிரதீபா வேறொரு இளைஞருடன் பழகி இருக்கிறார். இது தொடர்பாக பிரதீபா மற்றும் ஜெயசூர்யா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த இளைஞருடன் பழகக் கூடாது என ஜெயசூர்யா தனது காதலியை கண்டித்துள்ளார். ஆனாலும் பிரதிபா தொடர்ந்து அந்த நபருடன் பேசி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று காலை அழகர் கோவிலுக்கு செல்லலாமென காதலி பிரதீபாவை அழைத்திருக்கிறார் ஜெயசூர்யா.

இதையும் படிங்க: போதை வெறியில் மகன் படுகொலை.!! தந்தை சரண்.!!

ஆனால் பிரதீபாவை அழகர் கோவிலுக்கு அழைத்துச் செல்லாமல் ராஜாக்கூர் கண்மாய் கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார் ஜெயசூர்யா. அப்போது மீண்டும் அந்த இளைஞருடன் பேசுவதை தவிர்க்குமாறு ஜெயசூர்யா கண்டித்துள்ளார். இது தொடர்பாக இருவரிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கு கிடந்த கல்லை எடுத்து பிரதீபாவின் தலையில் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார் ஜெயசூர்யா. இதன் பிறகு காவல் நிலையம் வந்த அவர் நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்திருக்கிறார்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெயசூர்யாவை கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பிரதீபா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வேறொரு இளைஞருடன் பழகியதால் காதலி கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரை பகுதியில் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: மது போதையால் கொடூரம்... தந்தை அடித்து கொலை.!! மகன் கைது.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #madurai #Crime #Murder #Lover Surrender
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story