தனியார் மருத்துவமனையில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை.. காரணம் என்ன.?
தனியார் மருத்துவமனையில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை.. காரணம் என்ன.?
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறையில் வசித்து வருபவர் வைஷ்ணவி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்துள்ளார். இந்த மருத்துவமனையில் செவிலியர்களுக்கு தனி ஓய்வு அறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது வேலையை முடித்துவிட்டு மருத்துவமனையின் மேல் தளத்தில் உள்ள ஓய்வறைக்கு சென்ற வைஷ்ணவி நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனையடுத்து சக செவிலியர்கள் ஓய்வறைக்கு சென்று பார்த்த போது வைஷ்ணவி தனது துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செவிலியர்கள் கத்தி கூச்சலிட மருத்துவமனை நிர்வாகத்தினர் வந்து பார்த்தனர். மேலும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், செவிலியர் வைஷ்ணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.