மொன்தா புயல் எதிரொலியால் கனமழை எச்சரிக்கை! இந்த 7 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? வெளியாகும் குட் நியூஸ்...
வங்கக் கடலில் உருவான மொன்தா புயல் காரணமாக திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வாய்ப்பு உள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வானிலை மாற்றங்கள் தீவிரமடைந்து வருகிறது. பல இடங்களில் இடைவிடாது மழை பெய்து மக்கள் வாழ்விலும் போக்குவரத்திலும் பாதிப்பு உண்டாகும் நிலை உருவாகியுள்ளது.
மொன்தா புயல் வேகமெடுக்கும் எச்சரிக்கை
வங்கக் கடலில் உருவாகியுள்ள மொன்தா புயல் நாளை அதிக வேகத்துடன் கரையை கடக்கவுள்ளது என வானிலை ஆய்வுக் கழகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் வெளியிடப்பட்டுள்ளது. அங்கு மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இரவில் அடுத்த 2 மணி நேரத்தில் வெளுக்கப்போகும் கனமழை! இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்....
பல மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழையின் தாக்கத்தை பொருத்து நாளை அந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த மழை நிலைமையால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வங்க கடலில் உருவாகும் "மோந்தா" புயல்! இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... வானிலை மையம் அறிவிப்பு!