உல்லாசத்துக்கு மறுத்த பேராசிரியையின் அந்தரங்க வீடியோ லீக்.. கேடுகெட்ட புத்தியால் சிக்கிய பேராசிரியர்.. திருச்சி NIT திகில்.!
Trichy NIT Professor: தனிமைக்கு பேராசிரியை மறுப்பு தெரிவித்ததால் பேராசிரியர் செய்த இழி செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கல்லூரியில், பேராசிரியர் ஒருவர் செய்த கேவலமான செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருச்சி என்.ஐ.டி. குறித்து உள்ளூரில் பலவிதமாக பேசப்படும் நிலையில், பாடம் கற்பித்துக்கொடுக்கவேண்டிய பேராசிரியரே இவ்வாறான செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாணவிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
வெளிமாவட்டம், மாநிலம், நாடு மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்:
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கல்லூரி மிகவும் கவனம் பெற்றது ஆகும். இங்கு வெளி மாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களின் வசதிக்காக விடுதி வசதியும் இருக்கிறது. இந்த கல்லூரியில் கம்பியூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஜெரால்டு (வயது 50). இவர் என்.ஐ.டி. குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: வேலைக்கு வந்த இடத்தில்.. 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சென்னையில் திடுக் சம்பவம்.!
பழக்கம்:
இவருக்கும், அதே கல்லூரியில் வேலை பார்த்து வரும் 40 வயதுடைய பேராசிரியை ஒருவருக்கும் இடையே கடந்த 2021 ம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் நிலையில், நெருக்கமாக இருந்ததை ஜெரால்டு பேராசிரியைக்கு தெரியாமல் போட்டோ, வீடியோவும் எடுத்து வைத்துள்ளனர். இதனிடையே, 2025 ம் ஆண்டில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நெருங்கி பழகுவதை தவிர்த்து இருக்கின்றனர்.
மீண்டும் அழைப்பு:
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக ஜெரால்டு பெண்ணை தனிமையில் இருக்க அழைத்துள்ளார். இந்த விஷயத்துக்கு பேராசிரியை மறுப்பு தெரிவித்த காரணத்தால், செல்போனில் இருக்கும் அந்தரங்க வீடியோ, போட்டோவை வெளியிடுவேன் என மிரட்டி இருக்கிறார். இதனை பேராசிரியை கண்டுகொள்ளவில்லை. ஆனால், கேடுகெட்ட புத்திகொண்ட பேராசிரியர் தனிப்பட்ட உரையாடல், மெசேஜ், வீடியோ, போட்டோவை பேராசிரியையின் கணவர், கல்லூரி மாணவர், பேராசிரியர்களுக்கு பகிர்ந்து இருக்கிறார்.
புகார்:
இதனால் அதிர்ந்துபோன பேராசிரியை திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஜூலை 19 ல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த அதிகாரிகள், பேராசிரியர் ஜெரால்டை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. தம்பதிகளோ, காதல் ஜோடிகளோ தங்களின் தனிமை சமயங்களை ஆசைக்காக, அவருக்கே தெரியாமல் என படம்பிடித்து வைப்பது தற்போது ஒரு பழக்கமாக மாறி வருகிறது. இவ்வாறான விஷயங்கள் எந்த மாதிரியான விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த அதிர்ச்சி சம்பவம்.
இதையும் படிங்க: பெண்களே பெண்ணை கூட நம்பாதீங்க.. தோழியின் வாழ்க்கையை ஸ்கெட்ச் போட்டு சீரழித்த செவிலியர்?.. இப்படியும் நடக்குமா? தமிழகத்தில் ஷாக்.!