நடிகை நிலானி என்ன ஆனார்? மருத்துவமனையில் இருந்து வெளியான முதல் வீடியோ!
Nilani video released from hospital
தூத்துக்குடி கலவரத்தில் போலீசுக்கு எதிராக பேசி கைதானவர் சின்னத்திரை நடிகை நிலானி. பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்த இவர் சில தினங்களுக்கு முன்பு உதவி இயக்குனராக பணிபுரிந்த லலித்குமார் என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
லலித்குமார் என்பவர் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார். லலித்குமாரும் நடிகை நிலானியும் கடந்த மூன்று வருடமாக காதலித்து வந்ததாகவும், சீரியல் சூட்டிங்கில் இருந்தபோது லலித்குமார் தொந்தரவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
தான் காதலித்த காதலி காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் மனமுடைந்த லலித்குமார் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். மேலும் அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு நிலானியுடன் படுக்கை அறையில் இருந்த வீடியோ பதிவு மற்றும், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
மேலும் ஊடகங்கள் கொடுத்த மன அழுத்தத்தாலும், சமூக வலைத்தளங்களில் வெளியான கருத்துகளாலும் மனமுடைந்த நிலானி தற்கொலை முயற்சி செய்து மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்கொலை முயற்சி செய்ததால் நிலானி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதை பிரபல ஊடகம் ஓன்று தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு: நடிகை நிலானி தப்பி ஓட்டம் என்று செய்து வெளியிட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெமிலா என்னும் பெண் நிலானிக்கு ஆதரவாகவும், பொய்யான செய்திகளை பரப்பும் ஊடகங்களுக்கு எதிராகவும் மருத்துவமனையில் இருந்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ காட்சி!