"சாக போறேன் சந்தோசமா"...? ஒரு மெசேஜில் முடிந்த வாழ்க்கை.!! புதுமண தம்பதி எடுத்த சோக முடிவு.!!
சாக போறேன் சந்தோசமா...? ஒரு மெசேஜில் முடிந்த வாழ்க்கை.!! புதுமண தம்பதி எடுத்த சோக முடிவு.!!
ஆந்திர மாநிலத்தில் புதுமணத் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மற்றும் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியுயைம் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. 30 வயதான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீதாலா(26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை நடந்து வந்திருக்கிறது. இது தொடர்பாக பெற்றோரிடம் கூறிய போது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும்படி அறிவுரை வழங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக கணவன் மற்றும் மனைவியிடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் விரக்தியிலிருந்த கீதாலா, நான் சாகப் போகிறேன் இப்போது உங்களுக்கு சந்தோசமா.? என தனது கணவருக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இதனை படித்த சிரஞ்சீவி எனக்கு ரொம்ப சந்தோசம் என பதில் அனுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: ஒரு வருடத்தில் கசந்த வாழ்க்கை... உயிரை பறித்த குடும்ப சண்டை.!! கணவன் தற்கொலை.!!
இதனைப் பார்த்து மனமுடைந்த கீதாலா, தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து சிரஞ்சீவி வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுத்திருக்கிறார். மேலும் தனது மனைவியின் சாவிற்கு காரணமாகிவிட்டேன் என நினைத்து அவரும் அதே கயிற்றில் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் இருவரது சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: "எனக்கு பெண் கொடுத்த நீங்க நல்லவங்க.. ஆனா உங்க பொண்ணு.." திருமணமான 1 வருடத்தில் சோகம்.!! மணமகனின் துயர முடிவு.!!