×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணமான 46 நாட்களில் தூக்கில் தொங்கிய புதுமணப்பெண்.. ரூமில் இருந்த கேமிரா.. கண்ணீரில் குடும்பத்தினர்.!

Thane Girl Suicide after Done Marriage 46 Days: டாக்டர் கணவரின் அதிர்ச்சி செயலால் மனமுடைந்த புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்டார்.

Advertisement

கணவரின் சந்தேக புத்தியால் மனைவி தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

திருமணம்:

26-Year-Old Newlywed Visaka Dies by Suicide: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தானே, அம்பர்நாத் பகுதியில் வசித்து வருபவர் நிதின் திலகர். இவர் மருத்துவர் ஆவார். மும்பையைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்மணி விசாகா. இவர்கள் இருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இதையும் படிங்க: காதல் கணவனை குடும்பத்துடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மனைவி.. அதிர்ச்சிதரும் காரணம்.!

வரதட்சணை கொடுமை:

திருமணம் முடிந்த சில நாட்களுக்குள்ளாகவே திலகர் மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டுள்ளார். மேலும், திலகரின் குடும்பத்தினரும் பெண்ணை துன்புறுத்தி வந்துள்ளனர். உடலளவிலும், மனதளவிலும் சித்ரவதை தொடர்ந்த நிலையில், விசாகா ஒருகட்டத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காவல்துறை விசாரணை:

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விசாகாவின் வீட்டுக்குச் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விசாகாவின் வீட்டில் கேமிராவும் இருந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்கையில், நிதின் திலகர் மனைவியின் நடந்தையில் சந்தேகம் கொண்டு, வீட்டின் அறையில் கேமிரா பொருத்தி இருக்கிறார்.

கணவர், மாமியார், கணவரின் சகோதரர் கைது:

விசாகா யாரிடமாவது பேசிக்கொண்டு இருந்தால் யாரிடம் பேசுகிறார் என கேட்டு துன்புறுத்தி இருக்கிறார். அக்கம் பக்கத்தினரிடம் பேசினாலும் திலகர் மற்றும் அவரின் குடும்பத்தினர் விசாகாவை துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் ஒருகட்டத்தில் வேறு வழியின்றி தாயிடம் நடந்ததை கூறி அழுது, பின் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. பெற்றோர் மகளை மீட்க வருவதற்குள் துயரம் நடந்து முடிந்துள்ளது. விசாரணைக்குப்பின் திலகர், அவரின் தாய் சாயா, சகோதரர் நினைந் ஆகிய மூவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையும் படிங்க: சகோதரியின் திருமணத்தை நடத்த பணமில்லாததால் ஆசிரியர் தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #dowry #suicide #Visaka Thane #கேமிரா #வரதட்சணை தற்கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story