கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை சில நிமிடங்களில் உயிரிழப்பு..! குழந்தைக்கு கொரோனா இல்லை..! அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!
New born baby died who deliver corono positive near chennai
சென்னையை சேர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு பிறந்த குழந்தை சில நிமிடங்களில் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளை பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டநிலையில் எழும்பூரில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை நடைபெற்றுவந்தது. இந்நிலையில் அந்த பெண்ணிற்கு இன்று பிரசவவலி வந்ததை அடுத்து அந்த பெண்ணிற்கு பிரசவம் மூலம் பெண் குழந்தை பிறந்தது.
ஆனால் குழந்தை பிறந்த சில நிமிடங்களில் குழந்தை உயிர் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.