×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காய்ச்சல் என சென்றவருக்கு மருத்துவமனையில் நேர்ந்த விபரீதம்! ஸ்கேன் பரிசோதனையில் காத்திருந்த பேரதிர்ச்சி!

needle broke in patient body

Advertisement

கோவை குனியமுத்தூரில் வசித்து வந்தவர் அண்ணாதுரை. இவரது  மகன் தம்பிதுரை. 26 வயது நிறைந்த இவர் கடந்த மாதம்  22-ந்தேதி காய்ச்சல் காரணமாக அப்பகுதியில் உள்ள மீனாட்சி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை வாரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பதை கண்டறிந்து ஊசி போட்டுள்ளனர்.

 பின்னர் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் சில நாட்களில் ஊசி போடப்பட்ட இடுப்பு மற்றும் காலில் அவருக்கு லேசான வலி ஏற்பட்டுள்ளது. அந்த வலி நாளுக்கு நாள் அதிகரித்தநிலையில் அவர்  உடனே மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்று இடுப்பு மற்றும் காலில் ஏற்பட்டவலி குறித்து தெரிவித்துள்ளார். ஆனால் அங்கு மருத்துவர்கள் மற்றும் நர்ஸ் யாரும் சரியானபதிலளிக்கவில்லை.

இந்நிலையில் அவர் கடந்த 21-ந்தேதி கோவை அரசுமருத்துவமனைக்கு சென்ற அவர் ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்ததில் அவருடைய இடுப்பின் இடது பக்கம் சுமார் 7மி.மீட்டர் அளவில் ஊசி முறிந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 


அதனை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் ஊசியை அகற்ற முடிவுசெய்யப்பட்டது. ஆனால் இதுகுறித்து தகவலறிந்த மீனாட்சி மருத்துவமனை நிர்வாகம் தம்பிதுரைக்கு சிகிச்சை அளித்து ஊசியை எடுக்க முன்வந்தனர். பின்னர் அவர் நேற்று மாலை அவர் மீனாட்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தம்பிதுரை வழக்கறிஞர்களுடன் வந்து இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று மிரட்டினர். இழப்பீடு கொடுக்க முடியாது ஆனால் சிகிச்சை அளிக்கிறோம்  என்று மருத்துவர்கள் சொன்ன நிலையில் மருத்துவமனை மீது தம்பிதுரை அவதூறு பரப்பி வருகிறார் என்று மீனாட்சி மருத்துவமனை நிர்வாகத்தின் மருத்துவர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#needle #hospital
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story