தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளகாதலால் தாய், தாத்தாவுக்கு உணவில் விஷம்வைத்து கொன்ற கல்லூரி மாணவர்; தமிழ்நாட்டையே பதறவைத்த சம்பவம்.!

கள்ளகாதலால் தாய், தாத்தாவுக்கு உணவில் விஷம்வைத்து கொன்ற கல்லூரி மாணவர்; தமிழ்நாட்டையே பதறவைத்த சம்பவம்.!

Namakkal Youth Arrested by Cops After Main Accuse of Grand fa and Mother death  Advertisement

 

நாமக்கல் நகரின் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில், எருமைப்பட்டி பகுதியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் பகவதி, சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிட்டு, பின் வீட்டில் இருப்போருக்கு பார்சலாக சிக்கன் ரைஸ் கட்டிக்கொண்டு இருக்கிறார்.

அவர் வீட்டிற்கு சென்று சிக்கன் ரைஸை தாய் நதியா (37), சகோதரர் கௌசிக் (வயது 18), தாத்தா சண்முகம் (வயது 67), பாட்டி பார்வதி (வயது 63), சித்தி பிரேமா (வயது 35), அவரின் இரண்டு குழந்தைகள் ஆகியோருக்கு கொடுத்துள்ளார். உணவை சாப்பிட்டவர்கள் நதியா மற்றும் சண்முகம் ஆகியோர் உடல்நலக்குறைவை அடைந்துள்ளனர். 

இதனால் சிக்கன் ரைஸ் உணவில் பிரச்சனை எனக்கூறி சர்ச்சை எழ, காவல் துறையினர் உணவக உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தனர். மேலும், உணவு மாதிரிகளும் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, அதில் விஷம் கலந்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. 

விசாரணையில், கல்லூரி மாணவரான பகவதி கள்ளக்காதல் வயப்பட்ட நிலையில், அதனை கண்டித்த தாத்தா மற்றும் தாயை கொலை சதித்திட்டத்தை அரங்கேற்றியது அம்பலமானது.இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சண்முகம் முன்னதாகவே உயிரிழந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நதியாவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது பகவதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #namakkal #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story