தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேலைகொடுத்த முதலாளியின் மனைவியுடன் கள்ளக்காதல்.. கொன்று உடலை எரித்த பரபரப்பு சம்பவம்.!

வேலைகொடுத்த முதலாளியின் மனைவியுடன் கள்ளக்காதல்.. கொன்று உடலை எரித்த பரபரப்பு சம்பவம்.!

Namakkal Palapatti Man Murder by His Owner due to He Affair With Owner Wife Advertisement

மனைவியின் ஆண் நண்பரை கழுத்தை அறுத்து பெட்ரோல் ஊற்றி கொலை செய்த கணவன் உட்பட 5 பேர் நாமக்கல் அருகே கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடேசன். இவரது மனைவி லதா. நடேசன் கான்ட்ராக்டராக இருந்து வருகிறார். கணவன் - மனைவிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

நடேசன் தனது காண்ட்ராக்ட்ர் பணிகள் தொடர்பான கணக்கு விபரங்களை பார்ப்பதற்கு, அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை பணிக்கு நியமனம் செய்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில் எருமப்பட்டி அருகேயுள்ள புதுக்கோட்டை பகுதியிலிருந்து தூசூர் செல்லும் சாலையோரத்தில், செந்தில்குமார் முழுவதும் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். 

namakkal

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட விசாரணையில், பிணமாக மீட்கப்ட்டவர் செந்தில்குமார் என்பதும், அவரை நடேசன் மற்றும் அவரது உறவினர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்ததும் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, நடேசனை கைது செய்த அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், "தனது மனைவி லதாவுடன் - செந்தில்குமார் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்து இந்த செயலில் நான் மற்றும் எனது உறவினர்கள் 5 பேர் இந்த செயலில் ஈடுபட்டோம்" என்று தெரிவித்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் நடேசன் மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#namakkal #Palapatti #tamilnadu #Murder #Affair #police #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story