40 வயது பெண்ணுடன் கள்ளக்காதல்.. திருமணத்திற்கு வற்புறுத்தியதால் நடந்த பயங்கரம்.. 24 வயது இளைஞர் அதிர்ச்சி செயல்.!
40 வயது பெண்ணுடன் கள்ளக்காதல்.. திருமணத்திற்கு வற்புறுத்தியதால் நடந்த பயங்கரம்.. 24 வயது இளைஞர் அதிர்ச்சி செயல்.!

40 வயது பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருந்த 24 வயது இளைஞர், பெண்ணின் திருமண வற்புறுத்தல் காரணமாக அவரை கொலை செய்துள்ள பயங்கரம் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொசவம்பட்டி கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பாழடைந்த கிணற்றிலிருந்து, கடந்த டிச. 23 ஆம் தேதியன்று அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட பெண்மணி அதே கிராமத்தை சேர்ந்த பெண்மணி லலிதா (வயது 40) என்பது தெரியவந்தது. லலிதாவின் கணவர் கடந்த 20 வருடத்திற்கு முன்னதாக உயிரிழந்துவிட்ட நிலையில், அவர் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த சுரேந்திரன் என்ற இளைஞருடன் லலிதா தவறான தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்தது. அவ்வப்போது கள்ளக்காதல் ஜோடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்த நிலையில், சில நேரங்களில் சுரேந்தரின் வீட்டிற்கு சென்றும் லலிதா உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
ஒருகட்டத்தில், லலிதா இருவரும் சேர்ந்து வாழலாம் என்று சுரேந்தரை திருமணம் செய்ய வற்புறுத்திய நிலையில், உல்லாசத்திற்கு மட்டும் சம்மதம் தெரிவித்த சுரேந்தர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 15 ஆம் தேதி இருவரும் சந்தித்தபோது திருமணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் சுரேந்தர், கள்ளக்காதலி லலிதாவை கொலை செய்து, சடலத்தை கிணற்றில் வீசியதும் தெரிய வந்துள்ளது. தற்போது இளைஞர் சுரேந்தர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.