சாலையை கடக்கும் போது சோகம்.. விவசாயி லாரி மோதி பரிதாப பலி..!
சாலையை கடக்கும் போது சோகம்.. விவசாயி லாரி மோதி பரிதாப பலி..!

சாலையை கடப்பதற்காக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த விவசாயியை, சரக்கு லாரி மோதியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகாமையில் இலந்தகுட்டை ஊராட்சியை வெப்படை பகுதியில் வசித்து வந்தவர் ராமசாமி. இவர் ஒரு விவசாயி.
இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் இலந்தகுட்டை பகுதியில் சாலையை கடப்பதற்காக இவர் நின்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த சரக்கு லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ராமசாமியின் மீது மோதியுள்ளது.
இதனால் பலத்த காயமடைந்த ராமசாமியை அருகிலிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து விபத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இந்த விஷயம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் சாலையில் நின்ற விவசாயி மீது சரக்குலாரி மோதிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.