×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாய்லாந்து வேலைக்கு சென்று மியான்மருக்கு கடத்தப்பட்ட 13 தமிழர்கள் தாயகம் வருகை; நடந்தது என்ன?.. பரபரப்பு பேட்டி.!

தாய்லாந்து வேலைக்கு சென்று மியான்மருக்கு கடத்தப்பட்ட 13 தமிழர்கள் தாயகம் வருகை; நடந்தது என்ன?.. பரபரப்பு பேட்டி.!

Advertisement

 

டெலிகாலர் வேலைக்கு அழைத்து செல்லப்பட்டு, சட்டவிரோத கும்பலால் நாடு கடத்தப்பட்ட தமிழர்களில் 13 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.

தாய்லாந்து நாட்டில் டெலிகாலர் உட்பட பல்வேறு வேலைகள் இருப்பதாக சமீபத்தில் அதிகளவில் விளம்பரப்படுத்தப்பட்டது. மேலும், துபாய், மலேஷியா என்று பிற நாடுகளுக்கு செல்ல தயாராக இருந்த பணியாளர்களும், வெளிநாடு வேலைவாய்ப்பு நிறுவனத்தாரால் மூளைச்சலவை செய்யப்பட்டு தாய்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வாறாக தமிழகத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டவர்கள் என இந்தியா முழுவதிலும் இருந்து பலரும் தாய்லாந்துக்கு ஏஜெண்டுகளால் அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறாக தாய்லாந்து சென்றவர்களை சட்டவிரோதமாக அழைத்து சென்ற கும்பல், அங்கிருந்து மியான்மர் நாட்டிற்கு நாடுகடத்தியுள்ளது. 

விமான நிலையத்தில் இருந்து கார் உதவியுடன் கடத்தி செல்லப்படுவார்கள், மியான்மர் நாட்டிற்கு நுழைய ஆற்றை சட்டவிரோதமாக கடந்து அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இவர்களை அங்குள்ளவர்கள் போலியான சமூகவலைத்தள கணக்குகள் வாயிலாக விஐபி நபர்களிடம் சேட்டிங் செய்ய வற்புறுத்தியுள்ளார். 

அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்பட சித்ரவதை செய்துள்ளனர். இந்த செயலுக்கு உடன்பட மறுப்பு தெரிவித்தால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர்களை துன்புறுத்தி இருக்கின்றனர். நாளொன்றுக்கு 16 மணிநேரம் வேலைவாங்கி இருக்கின்றனர். இறுதியில், மியான்மர் இராணுவம் அவர்களை மீட்டுள்ளது.

இவர்களை போல பலரும் அங்கு சிக்கியுள்ள நிலையில், 50 தமிழர்களில் 13 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். பிறரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவர்களுடன் ஒருவராக சிக்கிய கோவையை சேர்ந்தவர் தனது அனுபவங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். இவர் துபாய்க்கு செல்ல முயற்சித்தபோது, ஏஜென்ட் தாய்லாந்துக்கு செல்லும் வகையில் மூளைச்சலவை செய்துள்ளார்.

தற்போது மீட்கப்பட்ட 13 தமிழர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற நிலையில், பிறரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவ்விஷயத்தில் ஏஜெண்டுகளும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Myanmar #tamilnadu #chennai #India #govt #மியான்மர் #தமிழ்நாடு #சென்னை #தாய்லாந்து
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story