1 வயது குழந்தையின் அழுகையை நிறுத்த தாய் செய்த கொடூர செயல். துடிதுடித்து உயிர் இழந்த குழந்தை.
Mother killed crying kid unknowingly in vellore

வேலூர் மாவட்டம், வாலஜா பகுதியை அடுத்து திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு ரம்யா என்ற 3 வயது பெண் குழந்தையும், மவுலிகா என்ற 1 வயது பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் பவித்ரா தனது கணவனிடம் இருந்து பிரிந்து தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் துணி கடை ஒன்றில் வேலைபார்க்கும் பவித்ரா கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் அவரது 1 வயது குழந்தை மவுலிகா தொடர்ச்சியாக அழுதுள்ளது. குழந்தையை சமாதானம் செய்ய ஏவல்வி முயற்சி செய்தும் பவித்ராவால் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவிலை. இதனால் வினோதமாக யோசித்த பவித்ரா அருகில் இருந்த துணி ஒன்றை எடுத்து குழந்தையின் வாயில் வைத்து அமுக்கியுள்ளார்.
இதில் மூச்சு விட முடியாமல் குழந்தை மயங்கி விழுந்துள்ளது. இதனால் பயந்துபோன அவர் குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு குழந்தையை சோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்னனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி VAO காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பவித்ராவை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.