×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெரும் சோகம்... திடீரென உயிரிழந்த மகன்... மகனின் உடலை பார்த்த அடுத்த நொடியே உயிரை விட்ட தாய்...

பெரும் சோகம்... திடீரென உயிரிழந்த மகன்... மகனின் உடலை பார்த்த அடுத்த நொடியே உயிரை விட்ட தாய்...

Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா - சாந்தி தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் ஜெய்கணேஷ் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

இந்நிலையில் சம்பவதினத்தன்று ஜெய்கணேஷ் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென மயக்கமாகி கீழே விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் ஜெய்கணேஷை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு ஜெய்கணேஷ் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதனையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஜெய்கணேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ஜெய்கணேஷின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை இறுதி சடங்கிற்காக அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மகனின் உடலை பார்தத்தும் கதறி துடித்த சாந்தி உடனே மயக்கமாகி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மகன் திடீரென்று இறந்து போன துக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாத தாய் சாந்தி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mother died #Son body #Senkalpattu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story