அடக்கடவுளே!! தந்தையை அடித்து கொன்று விட்டு தற்கொலை என நாடகம் ஆடிய தாய், மகன்... வெளியான அதிர்ச்சி தகவல்..!
அடக்கடவுளே!! தந்தையை கொன்று தூக்கில் தொங்கவிட்ட தாய், மகன்... வெளியான திடுக்கிடும் தகவல்..!
மாங்காடு பகுதியில் உள்ள மூகாம்பிகை நகரில் வசித்து வருபவர் கோவிந்தராஜ் - உமாராணி தம்பதியினர். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளார். கோவிந்தராஜ் கூலி வேலை செய்து வருபவர்.இதனையடுத்து கோவிந்தராஜ் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி உமாராணி போலீசில் புகார் அளித்தார்.
அதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையின் முடிவில் கோவிந்தராஜ் தலையில் வெட்டு காயம் பட்டு இறந்ததாக தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து போலீசார் உமாராணி மற்றும் அவரது மகனிடம் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம் மதுபோதையில் வந்த கோவிந்தராஜ் தனது மனைவி உமாராணியிடம் சமையல் செய்து தருமாறு கேட்டு அடித்து உதைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் இரும்பு கம்பியை எடுத்து தந்தையின் தலையில் சரமாரியாக அடித்துள்ளார்.
இதனால் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் பயந்து போன அவர்கள் எங்கு போலீசில் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் கோவிந்தராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளது அம்பலமாகியுள்ளது. உமாராணி மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.