புயல் எதிரொலியால் தமிழகத்தில் நாளையும் இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு...
ஆந்திரத்தை நோக்கி வேகமெடுத்து வரும் மோன்தா புயல் காரணமாக புதுச்சேரி ஏனாம் உட்பட பல இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – தமிழகத்திலும் மாணவர்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு.
மோன்தா புயல் கடலை நோக்கி வேகமெடுக்கும் நிலையில் ஆந்திரம், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மோன்தா புயலின் வேகத்தில் திடீர் அதிகரிப்பு
ஆந்திர கரையை நோக்கி நகரும் இந்த மோன்தா புயல் முன்னதாக மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் இருந்த நிலையில் தற்போது 15 கி.மீ. வரை அதிகரித்துள்ளது. இன்று (அக்.28) இரவு 11 மணிக்குள் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: BREAKING: புரட்டி எடுக்க போகும் Montha புயல்! அக்டோ. 28 இல் கரையை கடக்கும் இடம் அறிவிப்பு! தமிழகத்திலும் கனமழை எச்சரிக்கை....
புதுச்சேரி ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புயல் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் காரணமாக புதுச்சேரி ஏனாம் பகுதிகளில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரசு முன்கூட்டியே விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டுமென ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விடுமுறை கோரிக்கை எழுச்சி
மழை பாதிப்பு காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூரில் இன்று பள்ளிகள் மூடப்பட்டன. மழை நீடிப்பதால் நாளையும் பள்ளி விடுமுறை அறிவிக்க வேண்டுமென மாணவர்களும் பெற்றோர்களும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.
புயல் தாக்கம் மேலும் வலுப்படக் கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கையாக இருந்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... மோன்தா புயல் எச்சரிக்கை! பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.!!