புகைப்படங்களை வைத்து பணம் கேட்டு மிரட்டிய இளைஞர்.! உடந்தையாக இருந்த தாய்.! மாணவியின் தற்கொலையில் அதிர்ச்சி பின்னணி.!
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியுடன் கேசவகுமார் என்ற கல்லூரி மாணவர் நெருங்கி பழகிவந்துள்ளார். ஒரு கட்டத்தில் கேசவகுமார் தவறான நபர் என தெரியவந்ததை அடுத்து அவருடனான பழக்கதை தவிர்த்துள்ளார் கல்லூரி மாணவி.
இதனால் ஆத்திரமடைந்த கேசவகுமார், அவர்கள் நண்பர்களாக பழகியபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மார்ப்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டு விடுவதாக அந்த மாணவியை மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி பணம் மற்றும் தங்க நகையையும் கொடுத்துள்ளார். ஆனாலும் கேசவகுமார் தொடர்ந்து பணம்கேட்டு மாணவியை மிரட்டியதாக கூறப்படுகிறது.