BREAKING: இனி எல்லாமே மாடர்ன் தான்.... பள்ளி மாணவர்களுக்கு " புதிய வடிவமைப்புடன் நவீன சைக்கிள்" வழங்கும் முதல்வர் விஜய்!!!
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.277 கோடி செலவில் நவீன சைக்கிள்கள் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய வடிவமைப்புடன் கூடிய நவீன சைக்கிள்கள் வழங்கப்படும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்துக்காக ரூ.277 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.277 கோடி ஒதுக்கீட்டில் புதிய திட்டம்
பள்ளி மாணவர்களின் தினசரி பயணத்தை எளிதாக்கி, அவர்கள் கல்வியை இடையூறு இல்லாமல் தொடரும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என்று பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்தவே விஜய் முதல்வராக வந்தார்..! சட்டசபையில் நிதியமைச்சர் பெருமிதம்...!!!
புதிய வடிவமைப்பு, கூடுதல் பாதுகாப்பு
கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பாரம்பரிய சைக்கிள்களுக்கு மாற்றாக, தற்போதைய தலைமுறை மாணவர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை கருத்தில் கொண்டு புதிய வடிவமைப்பில் சைக்கிள்கள் தயாரிக்கப்பட உள்ளன. மேலும், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தரமான வசதிகள் இணைக்கப்பட்டு இந்த பள்ளி மாணவர்கள் பயன்பெறும் சைக்கிள்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், பெற்றோர்கள் வரவேற்பு
பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளின் நீண்ட நாள் தேவையை நிறைவேற்றும் முயற்சியாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது. முதல் பட்ஜெட்டிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.