தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விருதுநகர் பாலியல் வழக்கு: பொள்ளாச்சி சம்பவம் மாதிரி இருக்காது.! இந்தியாவுக்கே இது பாடமாக இருக்கும்.! பொறுத்திருந்து பாருங்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி.!

விருதுநகர் பாலியல் வழக்கு: பொள்ளாச்சி சம்பவம் மாதிரி இருக்காது.! இந்தியாவுக்கே இது பாடமாக இருக்கும்.! பொறுத்திருந்து பாருங்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி.!

Mk Stalin talk about viruthunagar Advertisement

விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது இளம்பெண்ணை ஹரிஹரன் என்பவர் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்து, அந்த விடியோவை அவரது நண்பர்களுக்கு அனுப்பி, ஹரிஹரனின் நண்பர்களும் அந்த வீடியோவை வைத்து மிரட்டி அப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஹரிஹரன், மாடசாமி, ஜுனத் அகமது, பிரவீன் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்தநிலையில் இன்று தமிழக சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகரில் இளம்பெண் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  மேலும் புகார் வந்தவுடன் 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காத வண்ணம் கண்காணிக்கப்படும். பொள்ளாச்சி சம்பவம், சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவங்கள் போல் அல்லாமல் விருதுநகர் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும்.

சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் உரிய தண்டனை பெற்றுத்தரப்படும். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது. குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிப்பதற்கு, சிபிசிஐடி கண்காணிப்பாளர் முத்தரசி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, இந்த வழக்கு தனி நீதிமன்றத்திற்குள் எடுத்து செல்லப்படும். மேலும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை கிடைக்கும். அதிகபட்ச தண்டனையும் பெற்று தரப்படும். விருதுநகர் பாலியல் வழக்கில் விரைந்து தண்டனை வாங்கி கொடுப்பதில், தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருக்கும். இதுப்போன்ற தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்றும் பொறுத்திருந்து பாருங்கள் என கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#MK Stalin
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story