×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மு.க.ஸ்டாலின் சைக்கிளில் சென்ற போது செய்த தவறு.! சார்.. நீங்களே இப்டி பண்ணலாமா.? எழும் கேள்விகள்..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுவாக சென்னை கடற்கரை சாலை, ஈசிஆர் சாலையில் சைக்கிள் பயிற்சி ம

Advertisement

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுவாக சென்னை கடற்கரை சாலை, ஈசிஆர் சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். தற்போது முதல்வர் ஆன பிறகும், பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் தனது சைக்கிள் பயிற்சியை விடாமல் செய்து வருகிறார். முதல்வராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே, கொரோனா தடுப்பு பணிகளில் கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் மு.க.ஸ்டாலின்.

இந்தநிலையில், கடந்த 4ம் தேதி, கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். வழிநெடுக போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான இந்த சைக்கிள் பயணத்தில் அவரது நண்பர்கள் உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஆனால் அன்றைய தினம் அவர் முகக்கவசம் அணியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவருடன் சென்றவர்கள் யாரும் முக கவசம் அணியாமல் சைக்கிள் ஓட்டி வந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், ஏன் யாரும் முகக்கவசம் அணியவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#MK Stalin #not wear masc
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story