×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜயின் ஆட்சிக்கு எதிர்ப்பு? மௌனம் களைத்த மு.க. ஸ்டாலின்.. என்ன சொன்னார் தெரியுமா?

MK Stalin TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை தமிழ்நாட்டில் உறுதி செய்ய திமுக இடையூறு செய்யாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னையில் பேட்டி அளித்தார்.

Advertisement

மகளிருக்கு மாதம் ரூ.2500 கொடுப்பது கடினம் என்றாலும், மாதம் ரூ.1000 வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் குறிப்பிட்டார்.

அரசியல் நகர்வுகள்:

Tamilnadu Politics 2026: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026ல் வெற்றியடைந்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் அரியணை இருக்கிறது. விஜய் தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், பெரும்பான்மையை சேர்க்க பணிகள் நடந்து வருகின்றன. திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் சமீபத்தில் தவெகவுடன் கூட்டணியை உறுதி செய்த நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவை சேமிக்கவும் அரசியல் நகர்வுகள் நடந்து வருகின்றன. அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒருசிலர் தவெகவில் இணையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  

இதையும் படிங்க: தவெகவுடன் கைகோர்க்கும் மதிமுக? பளிச் பதில் அளித்த வைகோ.!

இடையூறு இருக்காது:

இந்நிலையில், தவெக ஆட்சி அமைப்பது குறித்து பதில் அளித்த முன்னாள் முதல்வர் & திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "தவெக ஆட்சி அமைப்பதற்கு திமுக ஒருபோதும் இடையூறு செய்யாது. வரும் 6 மாதங்களுக்கு நாங்கள் எந்தவிதமான தொந்தரவும் செய்யமாட்டோம். திமுக அரசு செயல்படுத்திய பல்வேறு திட்டங்கள் தொடர வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணம்.

திமுக திட்டங்கள் தொடர வேண்டும்:

மகளிருக்கு தவெக உறுதியளித்ததுபோல மாதம் ரூ.2500 கொடுப்பது கடினமானது. ஆனால், திமுக அரசு வழங்கிய மாதம் ரூ.1000 வழங்க வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டும். காலைஉணவுத்திட்டம் தவெக அரசால் தொடரப்பட வேண்டும். 6 மாதம் அரசின் செயல்பாடுகளை கவனித்த பின்னரே சாதக / பாதகத்தை திமுக முன்வைக்கும். ஆண்டுக்கு 6 சிலிண்டர் கொடுப்பதாக தவெக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அது எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை. அதனை செய்தால் மகிழ்ச்சிதான்" என பேசினார்.

இதையும் படிங்க: #BREAKING: எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த ட்விஸ்ட்.. மொத்தமாக கலியாகப்போகும் அதிமுக?  

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#MK Stalin #tamilnadu #TN politics #முக ஸ்டாலின் #தவெக அரசு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story