×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BREAKING: மே 04ம் தேதி.. தேர்தல் முடிவுகள் குறித்து 'முதல் முறையாக' மனம் திறந்த மு.க. ஸ்டாலின்..!

MK Stalin Latest Speech: திமுக கழகத்தை சேர்ந்தவர்களின் உழைப்பின் பலன் மே 04ல் கிடைக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (01.05.2026) சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உரையாற்றினார். 

Advertisement

எல்லாருக்கும் எல்லாம் என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படும் அரசின் ஆட்சி தொடரும் என மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

மே முதல் நாள்:

Chennai News: சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உழைப்பாளர்கள் தினத்தை போற்றும் வகையில் மே நாளை கொண்டாடிய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், தொடர்ந்து உரையாற்றினார். அப்போது, அவர் பேசுகையில், "உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு மே முதல் நாள் கொண்டாடப்படுகிறது. முதன் முதலாக இந்தியாவிலேயே மே முதல் நாள் சென்னையில் தான் கொண்டாட தொடங்கப்பட்டது. சிந்தனை சிற்பி சிங்கார வேலர் தலைமையில் மே முதல் நாள் சென்னையில் கொண்டாடப்பட்டது. 

இதையும் படிங்க: BREAKING: எத்தனை எதிரிகள் வந்தாலும்...எத்தனை அணிகள் உருவானாலும்... மீண்டும் ஆளப்போவது உதயசூரியன் தான்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உற்சாக உரை!

உழைப்பின் பலன்:

உழைப்புக்கேற்ற ஊதியம் தொழிலாளர்களின் உரிமை. அதேபோல், திமுக கழக தொண்டர்கள் உழைத்ததன் பலன் மே 04ம் தேதி தெரிந்துவிடும். தேர்தல் முடிவு வருவதில் எந்த மாற்றமும் இல்லை. கருத்துக்கணிப்புகள் அடிப்படையில் நான் பேசவில்லை. திமுகவின் உணர்வை நான் புரிந்து பேசுகிறேன். மே முதல் நாளை தொழிலாளருக்குரிய மதிப்பை கொண்டக்கூடிய வகையில், பேரறிஞர் அண்ணா இந்த நாளை அரசு விடுமுறையாக அறிவித்து கொண்டாட தொடங்கினார்" என பேசினார்.

வெற்றி உறுதி?

தொடர்ந்து பேசிய முதல்வர், "தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவருக்கும் நல்ல செய்தி வரும். எல்லாருக்கும் எல்லாம் என்ற கொள்கையுடன் ஆட்சியை நடத்துகிறோம். அது தொடரும். அதற்கு நான் உறுதியளிக்கிறேன்" என பேசினார். தேர்தல் முடிவுகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியானாலும், மீண்டும் திமுக ஆட்சிதான் என்பதைப்போல முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் முறையாக பேசி இருப்பது கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பாஜக - அதிமுக இணைந்தது ஏன்? உண்மையை போட்டுடைத்த EPS...!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#MK Stalin #dmk #Tamilnadu Election #மே 1 #தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story