×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரஜினிக்காக களமிறங்கிய மு.க.அழகிரி! அதிரடியாக மு.க.அழகிரி போட்ட ட்விட்!

m.k Alagiri talk about rajini

Advertisement

ரஜினிகாந்திடம் நஷ்டஈடு கேட்பவர்களை ஆபிஸ் ரூம் அன்புடன் வரவேற்கிறது என்று மு.க.அழகிரி போட்டுள்ள டுவீட் வைரலாகி இருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 9ஆ ம் தேதி திரைக்கு வந்தது தர்பார் திரைப்படம். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து இருந்தது. இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தை 65 கோடி ரூபாய்க்கு வாங்கி, நஷ்டமடைந்ததாகவும், இதனால் ரஜினிகாந்த் இழப்பீடு வழங்க வேண்டும் என வினியோகஸ்தர்கள் போர்கொடி உயர்த்தியுள்ளனர். 

இந்நிலையில், இது குறித்து மு.க. அழகிரி அவரது ட்விட்டர் பக்கத்ததில் "நஷ்ட ஈடு கேட்பவர்கள், ஆபிஸ் ரூமிற்கு வரவும்" என கூறியுள்ளார். ஆனால் இது அழகிரியின்  அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமா என்பது தெரியவில்லை. 

ஆனால் ரஜினியின் நெருஙகிய நண்பரான மு.க. அழகிரி பெயரில் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து தான் இப்போது வைரலாகி வருகிறது. இந்த பதிவிற்கு முன்புக்கு "நண்பர் #ரஜினிக்கு கொலைமிரட்டல் விடுத்த #திக பிரமுகர்களை வன்மையாக கண்டிக்கிறேன்! இது போன்ற மிரட்டல்களை இனி ‘மன்னிக்க’ முடியாது" என்று பதிவிட்டிருப்பது குறிபிடித்தக்கது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajini #alagiri
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story