×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோயில்களில் ரூ.5 கட்டணம் வசூலிப்பது ஏன்? அமைச்சர் ரமேஷ் புதிய விளக்கம்!

கோயில்களில் ரூ.5 கட்டணம் வசூலிப்பது ஏன்? அமைச்சர் ரமேஷ் புதிய விளக்கம்!

Advertisement

தமிழகத்தில் உள்ள 32 கோவில்களில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் செல்போன்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. கோவில்களில் ரீல்ஸ் எடுப்பது, புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதைத் தடுத்து, ஆன்மீகச் சூழலைப் பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கோயில்களுக்கு வரும் பக்தர்களிடம் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டு, பக்தர்களின் செல்போன்கள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படுகிறது. இதனால் கோயில்களுக்கு வழிபாட்டிற்காக வரும் பொதுமக்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலிப்பது தேவையா என்ற விவாதமும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கோயில்களில் பக்தர்களிடம் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அந்தத் தொகை எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார் ‌

இதையும் படிங்க: தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா.? ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது தெரியுமா?

இது குறித்து பேசிய அவர், ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும் தொகை அரசின் வருவாயாக மட்டும் பார்க்கப்படுவதில்லை என்றும், கோயில்களின் பல்வேறு தேவைகளுக்காகவே அந்தத் தொகை பயன்படுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

கோயில்களில் பக்தர்களிடம் வசூலிக்கப்படும் ரூ.5 மூலம் கிடைக்கும் வருவாய், கோயில் ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட நிர்வாகச் செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.மேலும், கோயில்களுக்கு வருகை தரும் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு வழங்கப்படும் அன்னதானத் திட்டத்திற்கும் இந்தத் தொகை பயன்படுத்தப்படுகிறது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பொதுமக்களுக்கு குட் நியூஸ்… இன்று முதல் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #temple #Cellphone issue #Minister Ramesh
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story