"100 நாள் வேலை ஊதியம் எப்போது வழங்கப்படும்.?!" அமைச்சர் தகவல்.!
100 நாள் வேலை ஊதியம் எப்போது வழங்கப்படும்.?! அமைச்சர் தகவல்.!

100 நாள் வேலை திட்ட பயனாளிகள்
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரூ.3300 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். இது பற்றி பேசிய அவர், "100 நாள் வேலை திட்டத்தில் பயன்பெறும் பெண்கள் 86 சதவீதம், தாழ்த்தப்பட்டோர் 27 சதவீதம் இருக்கின்றனர்.
எப்போது சம்பளம் போடப்படும்?
உட்கட்டமைப்பு வசதி பொருட்கூறு நிலுவை ரூ.850 கோடி மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 100 நாள் வேலை திட்டத்தின் ஊதிய நிலுவைத் தொகை ரூ.2400 கோடியும் மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த நிதியை விடுவித்தவுடன் உடனடியாக 100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்." என்று தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: 3 வயது சிறுவனின் மூச்சுக்குழாய்யில் சிக்கிய எல்இடி பல்பு.. நெல்லை மருத்துவர்கள் சாதனை.!
இதையும் படிங்க: #Breaking: 15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் துன்புறுத்தல்.. கழுத்தறுத்து கொலை முயற்சி.. கரூரில் பயங்கரம்.!