தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமையா.? தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை... கொடூர காட்சி.!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமையா.? தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை கொடூர காட்சி.!

mentally-challenged-woman-killed-brutally-by-unidentifi Advertisement

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சாலையில் உறங்கிக் கொண்டிருந்த ஆதரவற்ற பெண் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா.? என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி மங்கலத்தில் உள்ள புறவழிச்சாலையில் அமைந்திருக்கும் கடை ஒன்றில் ஆதரவற்ற பெண் இரவு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அந்தப் பெண்ணின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்து இருக்கிறார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மர்ம நபர் அந்தப் பெண்ணின் தலையில் கல்லை தூக்கி போட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயல்வது பதிவாகி இருக்கிறது.tamilnadu

எனினும் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா.? என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Tirupur #Women Murder #sexual abuse #cctv
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story