நள்ளிரவில் பெண் வேடத்தில் சுற்றும் மர்ம நபர் செய்யும் அதிர்ச்சி காரியம்! கன்னியாகுமரியில் பரபரப்பு..!!!
நள்ளிரவில் பெண் வேடத்தில் சுற்றும் மர்ம நபர்.. பூட்டை உடைத்து திருட்டு.. கன்னியாகுமரியில் பரபரப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே, நள்ளிரவு நேரத்தில் பெண் வேடமிட்டு குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்து திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் மர்ம நபர் ஒருவர் நடமாடி வந்ததாக கூறப்படுகிறது. தொலைவில் இருந்து பார்க்கும்போது பெண் ஒருவர் நடந்து செல்வது போல் தோன்றிய நிலையில், அவரது உடல் அசைவுகள் மற்றும் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் அணியும் ஆடைகளை அணிந்து, முகத்தை துணியால் மறைத்தபடி அந்த நபர் வீதிகளில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள வீடுகளை நோட்டமிட்டு, அவற்றின் கதவுகள் மற்றும் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றதாகவும், கண்ணில் தென்படும் பொருட்களை திருடிச் சென்றதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: மனைவி வர மறுப்பு.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த கணவன்! சரமாறியாக 3 பேருக்கு நேர்ந்த கொடூரம்..!!!
இதற்கிடையே, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் மர்ம நபரின் நடமாட்டம் பதிவாகியுள்ளது. அதில், நள்ளிரவு நேரத்தில் பெண் வேடத்தில், முகத்தை துணியால் மறைத்தபடி அந்த நபர் சாலையில் நடந்து செல்லும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களிலும் பரவி வருகின்றன.
தொடர் திருட்டு மற்றும் மர்ம நபரின் நடமாட்டம் குறித்து அப்பகுதி மக்கள் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். காட்சிகளில் பதிவாகியுள்ள நபரை அடையாளம் காணும் பணியிலும், அவர் இதற்கு முன்பு வேறு பகுதிகளில் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் பெண் வேடமிட்டு மர்ம நபர் சுற்றித்திரிந்த சம்பவம் இரணியல் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வீட்டுக்குள் வீசிய துர்நாற்றம்... கதவை உடைத்த போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!