×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உணவு இல்லாமல் 3 நாட்களாக குப்பை கிடங்கில் கிடந்த முதியவர்.! எலும்பும் தோலுமாக மீட்ட பொதுமக்கள்.! சோக சம்பவம்.

Men at hospital garbage without eating food for 3 days

Advertisement

சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த முதியவர் ஒருவர் சாப்பிட உணவு இல்லாமல் மருத்துவமனையின் குப்பை கிடங்கில் மயங்கி கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த தகவலின் படி, செந்தில் குமார் என்ற அந்த நோயாளி கடந்த 20 நாட்களுக்கு முன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். ஆனால், அந்த நோயாளியை யாரும் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் கடந்த 20 நாட்களாக மருத்துவமனை வளாகத்தில் சுற்றி வந்துள்ளார்.

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் இவருக்கு சாப்பாட்டிற்கு பிரச்சனை எழுந்துள்ளது. இதனால், மூன்று நாட்களாக சாப்பிடாமல் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு அருகே இருக்கும் குப்பை போடும் பகுதியில் மயங்கிய நிலையில், எலும்பும் தோலுமாகா கிடந்துள்ளார் செந்தில்குமார்.

நபர் ஒருவர் மயங்கி கிடப்பதை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து மருத்துவமனைக்கு தகவல் கொடுக்க, தற்போது அவர் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். எனினும், அவர் யார்? என்ன பிரச்சனைக்காக மருத்துவமனைக்கு வந்தார்? அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாதது ஏன்? 20 நாட்களாக அங்கையே சுற்றிவர காரணம் என்ன என்பது குறித்து அங்கு யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை.

சிகிச்சை முடிந்து அவர் உயிர் பிழைத்தால் மட்டுமே இதற்கான விவரம் தெரியவரும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#hungry
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story