ஆற்றில் குளிந்த இளம் பெண்கள்! யாருக்கும் தெரியாமல் பைக்கை வைத்து இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்.
Men arrested in kanyakumari who took hidden photos

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆற்றில் குளிந்த இளம் பெண்களை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மறைமுகமாக ரகசிய கேமிரா வைத்து படம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை என்ற பகுதியில் பெண்கள் குளிக்கும் ஆற்றங்கரையில் இளைஞர் ஒருவர் வருவதும் அங்கு பைக்கை நிறுத்திவிட்டு செல்வதையும் வழக்கமாக வைத்திருந்துள்ளார். குறிப்பிட்ட இளைஞர் மீது சந்தேகம் வரவே பைக்கை நிறுத்துவதன் காரணத்தை விசாரித்ததில் மழுப்பலாக பதில் கூறியுள்ளார்.
இதனால் மேலும் சந்தேகம் வந்த நிலையில் அந்த பைக்கை சோதித்தால் அந்த பைக்கின் முன் பகுதியில் ஆற்றங்கரையை நோக்கி ஒரு கருப்பு நிற பேட்டி இருந்துள்ளது. அந்த பெட்டியை திறந்து பார்த்ததில் பெண்கள் குளிப்பதை படம் பிடித்தவாறு தொலைபேசி ஓன்று இருந்துள்ளது.
இதனால் அந்த இளைஞரை நைய புடைந்த அந்த பகுதி மக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.