தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நாளை முதல் அமலுக்கு வரும் ஊரடங்கு தளர்வு! அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டம்!

Meeting for 144

Meeting for 144 Advertisement

நாளை முதல் ஊரடங்கு தளர்வு அமலுக்கு வரும் நிலையில் உயர் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரானா பாதிப்பில் இந்திய அளவில் தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை, மே 17-ந்தேதி வரை நீட்டித்து மத்திய அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அப்போது சில கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது.

இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

corona

அதில் சென்னையில் 10 சதவீத ஊழியர்களைக் கொண்டு ஐ.டி. நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. (இந்த தளர்வு Containment Zone-க்கு பொருந்தாது)சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல தடையில்லை   உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து  சென்னை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #virus #144
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story