தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பயங்கர பரபரப்பு!! சற்றுமுன் போலீசார் கைது செய்தபோது கதறி அழுத மீரா மிதுன்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கேரளாவில் வைத்து சைபர் கிரைம் போ

meera-mithun-arrested-by-police-viral-video Advertisement

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கேரளாவில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் இயக்குனர்களை சாதிய ரீதியாக திட்டி பேசி புதிய சர்ச்சையில் சிக்கினார் மீரா மிதுன். சில பிரபல இயக்குநர்கள், தனது படத்தை மார்பிங் செய்து படங்களில் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகளை கூறினார். தொடர்ந்து சமூகத்தின் பெயரை குறித்தே பேசிய அவர், அந்த சமூகத்தை சார்ந்த அனைத்து திரைப்பட இயக்குநர்களும் திரை துறையை விட்டு நீக்கப்பட வேண்டியவர்கள் என்றும் அந்த வீடியோவில் கூறியிருந்தார்.



இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து மீரா மிதுன் மீது சைபர் க்ரைமில் புகார் தெரிவிக்கப்பட்டது. 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், நேரில் வந்து ஆஜராகும்படி மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர்களால் தன்னை கைது செய்ய முடியாது என கூறி மேலும் ஒரு வீடியோவை மீரா மிதுன் இணையத்தில் வெளியிட்டுயிருந்தார். இந்நிலையில் நடிகை மீரா மிதுனை கேரளாவில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.Meera mithun

மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்ய முயன்ற போது போலீசிடம் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியுள்ளார் மீரா மிதுன்.  மேலும் கத்தியை எடுத்து குதிக்கொள்வேன் என்றும், அருகில் இருந்த காதலரிடம் கத்தியை எடுக்க சொல்லியும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.

மேலும், ஒரு பெண்ணுக்கு இப்படித்தான் நடக்குமா முதலமைச்சர் அவர்களே என்று புலம்பியுள்ளார் மீரா. கைது செய்யப்பட்ட மீரா மிதுன்  சென்னை அழைத்துவர போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Meera mithun #Viral videos
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story