×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

'பாலியல் புகார்'.. பிரபல அரசியல்கட்சி நிர்வாகி மதூர் சத்யா அதிரடி கைது..!

Mathur Sathya Arrested:  மதூர் சத்யா கைது செய்யப்பட்டார்.

Advertisement

சமூக செயற்பாட்டாளர் மதூர் சத்யா பாலியல் புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

தொடர் பாலியல் புகார்கள்:

புரட்சிகரமான கருத்துக்களுடன் சமூகவலைத்தளங்களை ஆட்கொண்ட அரசியல் பிரபலம் மதூர் சத்யா. இவர் பேசும் கருத்துக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பின்தொடர்பாளராக இருந்து வருகின்றனர். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி ஆவார். இதனிடையே, சமீபத்தில் சத்யா தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்கு ஏராளமான புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதையும் படிங்க: டெல்லியில் அதிர்ச்சி... பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.!! சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி தலைமறைவு.!!

கட்சியில் இருந்து நீக்கம்:

இந்த விஷயம் தொடர்பாக கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.கே. சிவா அறிக்கையும் வெளியிட்டு இருந்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் சத்யா குறித்து மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் வாயிலாக புகார்கள் அளித்துள்ளதாகவும், இதுவிசயமாக ஆலோசனை நடந்து அவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்ட நடவடிக்கைக்காக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதிரடி கைது:

இந்த புகார் தமிழக அரசியல் களத்திலும், சமூக வலைத்தளத்திலும் பேசுபொருளாகியது. இதனிடையே, சத்யாவை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர் பெங்களூரில் வைத்து அதிரடியாக நேற்று இரவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட சத்யா, கடந்த 2019ம் ஆண்டு தனது பொறியியல் பட்டதாரி வேலையை விட்டுவிட்டு சமூகநீதி-சமத்துவத்துக்காக அரசியலில் களமிறங்கினார். தற்போது சர்ச்சை புகாரில் சிக்கி இருக்கிறார். 

இதையும் படிங்க: நெஞ்செல்லாம் பதறுதே.. உடலில் காயங்கள்., ரத்தக்கறையுடன் வீடு திரும்பிய 7 வயது சிறுமி.. தின்பண்டம் ஆசை காட்டி இளைஞர் செய்த கொடூரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TN politics #மதூர் சத்யா கைது #அரசியல் #chennai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story