×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சென்னை போலீசாருக்கே அல்வா கொடுத்த இன்ஸ்பெக்டரின் உறவினர்.. குறைந்த விலையில் தங்கம் மோசடி.. சென்னையில் சம்பவம்.!

சென்னையில் வேலை பார்த்து வரும் காவல் அதிகாரிகளிடம் பெண் காவலர் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement

சென்னை வட்டார காவலர்களிடம் மெகா மோசடி நடந்துள்ளது.

அதிகாரிகள் விசாரணை:

சென்னையில் உள்ள ராயபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வேலை பார்க்கும் காவலர்களிடம் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மருத்துவ மாணவியை விடுதிக்கு அழைத்து வன்கொடுமை செய்த மருத்துவர்.. தேர்வில் உதவுவதாக கூறி கொடூரம்.!

ரூ.20 கோடி:

மேலும், இந்த வழக்கு விவகாரத்தில் அதிகாரிகள் ஷீலாவின் உறவினர் பிரபு மணியை கைது செய்துள்ளனர். இவர் காவல் ஆய்வாளரின் வாகனத்தில் சென்று, குறைந்த விலைக்கு தங்க காசுகளை வாங்கித் தருவதாக கூறி சாதாரண காவலர் முதல் துணை கமிஷனர் வரை அதிகாரிகளிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி இருக்கிறார். மொத்தமாக ரூ.20 கோடி வரை வசூல் செய்யப்பட்டு இருக்கலாம்.

போலீசுக்கே அல்வா:

பணத்தை கொடுத்த பலரும் தற்போது குமுறி வரும் நிலையில், இதுதொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. பிரபு தற்போதைய நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிறரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல மோசடி வழக்குகளை கையாண்ட காவல்துறை அதிகாரிகளே இதுபோன்ற மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளது நடந்துள்ளது.

இதையும் படிங்க: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சாக்லேட் கொடுப்பதாக நடந்த கொடுமை.. அலறி ஓடிவந்து கதறிய சோகம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #chennai police #மோசடி #தங்க காசு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story