×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இ-பதிவு முறையில் இருந்து திருமணத்தை திடீரென நீக்கியது தமிழக அரசு!! இனி திருமணத்திற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல சிக்கல்!!

இ- பதிவு முறையில் இருந்து  திருமணம் என்ற பகுதி திடீரென நீக்கப்பட்டுள்ளது.

Advertisement

இ- பதிவு முறையில் இருந்து  திருமணம் என்ற பகுதி திடீரென நீக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பினால் தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டத்திற்குள்ளையும், வெளியேயும் செல்ல இன்று முதல் இ-பதிவு முறை கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

குறிப்பாக திருமணம், முக்கியமானவர்கள் இறப்பு, வேலை வாய்ப்பு போன்றவற்றிக்கு செல்ல பொதுமக்கள் இ-பதிவு செய்ய வேண்டும் எனவும், அதனை ஆதாரமாக கொண்டு அவர்கள் தடையில்லாமல் செல்லலாம் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.

ஆனால் இ-பதிவு இணையதள பக்கத்தில் இருந்து திருமணத்திற்கான அனுமதி மட்டும் இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளது. திருமணம் என்ற பகுதி திடீரென நீக்கப்பட்டுள்ளது. இதனால், திருமணத்திற்காக இனி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கம் அளிக்கப்படவில்லை.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#E-register #E-Pass
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story