பெண்ணை வம்பிழுத்ததால் "Dubsmash" பிரபலம் மண்ணை சாதிக்கை வெளுத்தெடுத்த இளைஞர்கள்!
Mannai sathik reply video to his viral video
டப்மாஷ் பிரபலம் மண்ணை சாதிக் இளைஞர்களால் தாக்கப்பட்டதாக வந்த வதந்திக்கு பதிலளித்துள்ளார் மண்ணை சாதிக். தனது டப்மாஷ் வீடியோவால் மிகவும் பிரபலமானவர் மண்ணை சாதிக்.
இவர் வெளியிட்ட பல டப்மாஸ் வீடியோக்கள் பல மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமான இவர் இன்று காலை அருகில் இருந்த பெண்ணை சீண்டியதாகவும் அதற்காக அருகில் இருந்த இளைஞர்கள் அவரை தாக்கியதாகவும் வீடியோ ஓன்று இணையதளத்தில் வைரலாக பரவியது.
அந்த வீடியோவில் இருந்த இளைஞரின் முகம் சரியாக தெரியாததால் அது யார் என்று பார்வையாளர்களால் அடையாளம் காணமுடியவில்லை. பிரபல இணையதள நாளிதழ் ஓன்று இந்த வீடியோவை லைவ் செய்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த மண்ணை சாதிக் அது தான் இல்லை என்றும், பெண்களை நான் என்றும் சீண்ட மாட்டேன், ஹன்சிகாவை மட்டும்தான் சீண்டுவேன் என தில்லாக பதில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவர்க்கும் பதிலடி கொடுத்துள்ளார்.