தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஹலோ மைனா நந்தினியா.. இரவு நேரங்களில் அதிகரிக்கும் கொஞ்சல்கள்! கடுப்பான அரசியல் பிரமுகர் ! வெளியான அதிர்ச்சி பின்னணி!

manina nadini fake facebook proplems

manina nadini fake facebook proplems Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் சரவணன் மீனாட்சி.இந்த  தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நந்தினி அதனைத்தொடர்ந்து அவர் தொடர்ந்து பல சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மைனா நந்தினியின் பெயரில் போலி முகநூல் கணக்கை உருவாக்கிய  மர்ம நபர்கள் சிலர் குருநாதன் என்பவரது செல்போன் நம்பரை அதில் இணைத்துள்ளனர். குருநாதன் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அண்ணாமடுவை சேர்ந்தவர்.இவர் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.

maina nandhini

இந்நிலையில் மைனா நந்தினி என்ற நினைத்த இளைஞர்கள் பலர் இரவு நேரங்களில் போன் செய்து நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க உங்களை நேரில் பார்க்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் சிலர் தகாத வார்த்தைகளையும் பேசியுள்ளனர். இவ்வாறு இரவு பகல் பாராமல் குருநாதனுக்கு போன் வந்துள்ளது இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக இக்கொடுமையை அனுபவித்த குருநாதன் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில் அவர் மைனா நந்தினி பெயரில் போலியான முகநூல் பக்கம் உருவாக்கி அதில் எனது அலைபேசியை தவறாக கொடுத்துள்ளனர். இதனால் நான் மிகவும் சிரமத்தில் உள்ளேன். எனவே சைபர் கிரைம் போலீசார் போலிமுகநூல் கணக்கை முடக்கி தனது செல்போன் எண்ணை அதிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maina nandhini #fake facebook #gurunathan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story