×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தலைக்கேறிய குடிபோதை..! சகோதரி என்றும் பார்க்காமல் குடிபோதையில் நபர் செய்த காரியம்..! மதுரை அருகே நடந்த பகீர் சம்பவம்..!

Man thrown bomb on sister house near madurai

Advertisement

குடிபோதையில் நபர் ஒருவர் தனது சொந்த சகோதரி என்றும் பார்க்காமல் அவர் வீட்டில் வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள ராமகவுண்டன் பட்டியை சேர்ந்தவர் முருகன். குடிக்கு அடிமையான முருகன் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது சொந்த சகோதரியான செல்வராணியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவும் முருகன் மதுஅருந்திவிட்டு முருகன் செல்வராணியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனை பொறுத்துக்கொள்ளமுடியாத செல்வராணி இதுகுறித்து முருகனிடம் சண்டைபோட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் தனது நண்பன் சின்னத்துரை உதவியுடன் தனது சகோதரி வீட்டில் 4 வெடிகுண்டுகளை வீசியுள்ளார்.

இந்த வெடி விபத்தில் செல்வராணி மற்றும் அவரது இரண்டு மகன்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பிய நிலையில், வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் உடல் சிதறி உயிர் இழந்துள்ளது. இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த முருகனை கைது செய்தநிலையில், அவரது நண்பன் சின்னத்துரையை தேடிவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story