12 வருடங்கள் கழித்து வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த தந்தை. வீட்டில் மகன் கண்ட காட்சி!
Man suicide after return from foreign about 12 years
ராமநாதபுரம் மாவட்டம் கீழ்க்கரை எனும் ஊரை சேர்ந்தவர் புகாரி அகமது (38). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாத்திமா (34) என்பவருக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் திருமணம் முடித்து மலேசியாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார் புகாரி. அங்கு முறையான விசா இல்லாமல் தங்கியதால் போலிசாரால் கைது செய்யப்பட்டு 12 வாருங்கள் சிறையில் இருந்துள்ளார். இநிலைலையில் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டு சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார் புகாரி.
புகாரி சொந்த ஊருக்கு திரும்பியதில் இருந்து அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் நேற்றும் மனைவியுடன் சண்டைபோட்டுவிட்டு அறைக்கு தூங்க சென்றுள்ளார் புகாரி.
அடுத்தநாள் காலை நீண்ட நேரமாகியும் புகாரி கதவை திறக்காததால் அவரது மகன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் தூக்கில் தொங்கியவாறு கிடந்துள்ளார் புகாரி. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இத்தனை வருடம் கழித்து வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய புகாரி தார்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.