"கசந்தது காதல்..." கல்லைப் போட்டுக் கொன்ற மாமனார்.!! குமரியில் பயங்கரம்.!!
கசந்தது காதல்... கல்லைப் போட்டுக் கொன்ற மாமனார்.!! குமரியில் பயங்கரம்.!!
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிபின் என்ற இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இறந்த இளைஞரின் மாமனாரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம் கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி என்ற ஊரை சேர்ந்தவர் சிபின்(25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரது மகளை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டிற்கும் தெரியவே பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல் ஜோடி திருமணம் செய்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு கணவன் மற்றும் மனைவியிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டிருக்கிறது.
தலையில் கல்லை போட்டு கொடூர கொலை இந்நிலையில் சிபின் தனது காதல் மனைவியிடம் மீண்டும் சண்டை போட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து கணவனிடம் கோபித்துக் கொண்ட மனைவி அவரது தந்தை வீட்டிற்கு சென்றிருக்கிறார். இதனையடுத்து மனைவியை சமாதானம் செய்து தனது வீட்டிற்கு அழைத்து வருவதற்காக தனது மாமனார் ஞானசேகரன் வீட்டிற்கு சென்றிருக்கிறார் சிபின். அப்போது ஞானசேகரன் மற்றும் சிபின் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த ஞானசேகரன் ஹாலோ பிளாக் கல்லை தனது மருமகன் தலையில் போட்டிருக்கிறார். இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிபின் வலியால் அலறி துடித்துள்ளார்.
இதையும் படிங்க: "என் மனைவி கேக்குதா உனக்கு.." கள்ளக்காதல் ஜோடி உல்லாசம்.!! கணவன் எடுத்த கொடூர முடிவு.!!
கைது செய்யப்பட்ட மாமனார் சிபினின் அலரல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் சிபின். இதனைத் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ஞானசேகரனை கைது செய்து சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: போதையால் சீரழிந்த குடும்பம்... கணவனை போட்டுதள்ளிய மனைவி.!!! போலீஸ் விசாரணை.!!