×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மளிகைக்கடை உரிமையாளர் எரித்துக் கொலை.! ஆண் நண்பருடன் சிக்கிய மனைவி.!

மளிகைக்கடை உரிமையாளர் எரித்துக் கொலை.! ஆண் நண்பருடன் சிக்கிய மனைவி.!

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். 34 வயது நிரம்பிய இவர் அதே ஊரில் மளிகைக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு வசந்தகுமாரி என்ற மனைவியும், மூன்று பெண் பிள்ளைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இவர், பக்கத்துக்கு கிராமத்திற்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறி சென்றார்.

ஆனால் நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் சந்தோஷ்குமாரை பல இடங்களில் தேடிவந்தனர். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில், கெடிலம் ஆற்றில் ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், அந்த சடலம் காணாமல் போன சந்தோஷ்குமார் என்பது தெரிய வந்தது. உடனடியாக சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சந்தோஷ்குமாரின் மனைவி வசந்தகுமாரிக்கும், சேலத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு பழக்கம் ஏற்பட்டதாகவும், அந்த நபர் அடிக்கடி வசந்தகுமாரியின் வீட்டிற்கு வந்து செல்வார் என்பதும் தெரிய வந்தது. இந்தநிலையில் குறித்த நபர் மற்றும் சந்தோஷ்குமாரின் மனைவியிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #Wife
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story