"ஜெயிலுக்கு போனா அவன் கூட போயிடுவியா..." கொலையில் முடிந்த கள்ளக்காதல்.!! பழ வியாபாரி கைது.!!
ஜெயிலுக்கு போனா அவன் கூட போயிடுவியா... கொலையில் முடிந்த கள்ளக்காதல்.!! பழ வியாபாரி கைது.!!
தேனி மாவட்டத்தில் தகாத உறவு தொடர்பான தகராறில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பழ வியாபாரியை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கரட்டுப்பட்டி என்ற ஊரில் ஆண்டிவேல் என்பவர் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் ஆண்டிவேலின் மனைவி இறந்து விட்டார். இதன் பிறகு தனது சகோதரி முறை உறவான ஆனந்த ராணி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்திருக்கிறார் ஆண்டிவேல். இவர்களது கள்ள உறவு பற்றியறிந்த ஊர் மக்கள் இருவரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பக்கத்து வீட்டு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஆண்டிவேலை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையிலடைத்தனர்.
ஆண்டிவேல் சிறைக்குச் சென்ற பிறகு தனியாக இருந்து ஆனந்த ராணிக்கு பழ வியாபாரியான பாலமுருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. இந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த ஆண்டிவேல், ஆனந்த ராணியின் கள்ளத்தொடர்பு பற்றி கேள்விப்பட்டு ஆத்திரமடைந்துள்ளார். இது தொடர்பாக பாலமுருகனிடம் தகராறு செய்திருக்கிறார் ஆண்டிவேல். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் ஆண்டிவேலை கத்தியால் குத்தி கொடூரமாக படுகொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க: "அம்மாவ தப்பா பேசுவியா நீ..' 75 வயது முதியவர் கொடூர கொலை.!! பரபரப்பு பின்னணி.!!
இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் ஆண்டிவேல் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பாலமுருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தனிமையில் உல்லாசம்... கள்ள உறவில் வாக்குவாதம்.!! இளம் பெண் கொடூர கொலை.!!