×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருச்சியில் பயங்கரம்... பேருந்து நிறுத்தத்தில் இளைஞர் படுகொலை.!! கொலையாளி பகீர் வாக்குமூலம்.!!

திருச்சியில் பயங்கரம்... பேருந்து நிறுத்தத்தில் இளைஞர் படுகொலை.!! கொலையாளி பகீர் வாக்குமூலம்.!!

Advertisement

திருச்சி மாவட்டத்தில் இளைஞர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கொலையாளிகளை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பழிக்கு பழியாக இந்த கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள ஆலத்துடையான்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு திருமணமாகி மாதவி என்ற மனைவியும் அர்ச்சனா என்ற மகளும் உள்ளனர். சில குற்ற வழக்குகளில் தொடர்புடைய சுரேஷ தனது மனைவி மற்றும் மகளுடன் முள்ளிப்பாடியிலுள்ள மாமியார் வீட்டில் வசித்து வந்தார். அங்கு கூலி வேலை செய்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 2ம் தேதி முள்ளிப்பாடி பேருந்து நிலையத்தில் சுரேஷ் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரை வெட்டி கொலை செய்தனர். பின்னர் அவரது உடலில் இருந்து தலையை துண்டாக அறுத்து சென்றனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தலையில்லாத சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்.

இதையும் படிங்க: கள்ள உறவுக்காக நண்பன் கொலை.!! மனைவி, கள்ளக்காதலன் கைது.!!

மேலும் கொலை நடந்த இடத்தில் காவல்துறை நடத்திய சோதனையில் அங்குள்ள ஏரிக்கரையில் பதுங்கியிருந்த கல்பேஷ் மற்றும் அஸ்வின் குமார் ஆகியோரை காவல்துறை கைது செய்தது. இது தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏரியில் வீசப்பட்ட தலையும் மீட்கப்பட்டது. மேலும் காவல்துறையிடம் வாக்குமூலமளித்த கல்பேஷ், சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் சேலத்தில் கூலி வேலைக்குச் சென்ற தனது தம்பியை கொலை செய்ததால் பழி தீர்ப்பதற்காக சுரேஷை தலை துண்டித்து கொலை செய்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: "உன் பொண்டாட்டி கிட்ட போட்டு கொடுக்கிறேன் இரு.." கள்ளக்காதல் விவகாரம்.!! கோர முடிவு.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #tiruchirapalli #Crime #Murder #Revenge Kiling
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story