"கள்ளக்காதலனான நண்பன்..." காதலியை கொன்று காதலன் தற்கொலை.!! போலீஸ் விசாரணை.!!
கள்ளக்காதலனான நண்பன்... காதலியை கொன்று காதலன் தற்கொலை.!! போலீஸ் விசாரணை.!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூட்டிய வீட்டுக்குள் 2 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைச் சம்பவம் வெளியாகி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவரான செல்வராஜ் என்பவருக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகளும் 1 பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த இவரது நண்பரான செல்வராஜ் என்பவருக்கு 23 வயதில் காயத்ரி என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறது. செல்வராஜ் தனது நண்பன் குணசேகரனை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார். இதன் காரணமாக செல்வராஜ் மற்றும் குணசேகரின் மனைவி காயத்ரி இடையே நட்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. செல்வராஜ் மற்றும் காயத்ரி ஆகியோர் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். மேலும் தங்களது கள்ளக்காதல் குணசேகரனுக்கு தெரியக்கூடாது என்பதற்காக இவர்கள் இருவரும் ஓசூர் அருகே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அடிக்கடி அங்கு சென்று வந்துள்ளனர். நேற்று மாலை ஓசூர் நகரில் உள்ள வீட்டில் 2 சடலங்கள் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணையை தொடங்கியது.
இதையும் படிங்க: தனிமையில் உல்லாசம்... கள்ள உறவில் வாக்குவாதம்.!! இளம் பெண் கொடூர கொலை.!!
காவல்துறையின் விசாரணையில் இறந்த நபர்கள் செல்வராஜ் மற்றும் காயத்ரி என தெரிய வந்தது. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் செல்வராஜ் மற்றும் காயத்ரி இடையே தகராறு ஏற்பட்டு செல்வராஜ், காயத்ரியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயத்ரியின் மகனான சுஜன் அருகிலிருந்து வீட்டில் ஒப்படைக்கப்பட்டதும் காவல்துறைக்கு தெரிய வந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக முழுமையான தகவல்கள் காயத்ரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2 முறை கரு கலைப்பு.!! "இப்போவே கல்யாணம் பண்ணு..." மிரட்டிய காதலி.!! எரித்து கொன்ற காதலன்.!!