அண்ணியுடன் முறை தவறிய காதல்... இளைஞர் படுகொலை.!! அண்ணன் கைது.!!
அண்ணியுடன் முறை தவறிய காதல்... இளைஞர் படுகொலை.!! அண்ணன் கைது.!!
பீகார் மாநிலத்தில் அண்ணியுடன் கள்ளக்காதலில் இருந்த தம்பி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அண்ணனை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலம் கோஹ்பர்வா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோஜ். இவரது தம்பி அமுத் ஷா. மனோஜுக்கு திருமணமாகி முஸ்கான் என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் மனோஜின் தம்பி அமுத் ஷாவிற்கும் அவரது அண்ணி முஸ்கானுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தனது கொழுந்தனாருடன் வீட்டை விட்டு ஓடியிருக்கிறார் முஸ்கான். இது மனோஜுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக காவல்துறையிடம் புகாரளித்த நிலையில் அமுத் மற்றும் முஸ்கானை கண்டுபிடித்த காவல்துறையினர் அவரை கணவருடன் சேர்ந்து வாழ அறிவுறுத்தினர். எனினும் முஸ்கான் தனது காதலனான அமுத் ஷாவுடன் வாழ்வேன் என உறுதியாக கூறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மனோஜ் தனது தம்பியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தார்.
இதையும் படிங்க: போதை வெறியில் மகன் படுகொலை.!! தந்தை சரண்.!!
இந்த கொடூர சம்பவத்தில் மனோஜை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த அமுத் ஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அண்ணியுடன் கொண்ட தவறான உறவால் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: கள்ளக்காதல் வெறி.!! "கணவனை கொன்று பாம்பை கடிக்க விட்ட கொடூரம்..." மனைவி, காதலன் கைது.!!