தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இப்படியெல்லாம் கூட மரணம் வருமா? நிமிடத்தில் நடந்த சம்பவத்தால் உயிரை விட்ட இளைஞர்!

Man died by meat cleaning machine

Man died by meat cleaning machine Advertisement

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர், திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையம் அருகே உள்ள இறைச்சிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். வழக்கம்போல் இரண்டு தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற ஏழுமலை தனது பணி முடிந்து பிறகு இறைச்சி வெட்ட பயன்படுத்தும் கட்டையை அரவை இயந்திரம் மூலம் சுத்தம் செய்துள்ளார்.

தனது கழுத்தில் துணி கட்டப்பட்டிருப்பதை உணராத ஏழுமலை சற்று கவனக்குறைவாக அரவை இயந்திரத்தை பயன்படுத்தியுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக, அரவை இயந்திரத்தில் ஏழுமலையின் கழுத்தில் இருந்த துணி சிக்கிக் கொண்டது. இயந்திரம் வேகமாக சுற்றியதை அடுத்து இயந்திரத்தில் சிக்கிய துணி ஏழுமலையின் கழுத்தை வேகமாக இறுக்கியுள்ளது. இதில் மூச்சு திணறி ஏழுமலை கீழே விழுந்துள்ளார்.

உடனே அங்கிருந்தவர்கள் அரவை இயந்திரத்திற்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்து ஏழுமலையை காப்பாற்ற முற்பட்டுள்ளனனர். ஆனால், அதற்குள் ஏழுமலை பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். ஒரு மனிதனுக்கு இப்படியெல்லாம் கூட மரணம் வருமா? என்பதுபோல  நிமிடத்தில் ஏழுமலையின் உயிர் பறிபோன சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்த cctv காட்சிகள் வெளியாகி வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #Chicken center accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story