விநாயகர் சதுர்த்தி நாளில் சோகம்... சிலையை கரைக்கச் சென்ற வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்!
விநாயகர் சதுர்த்தி நாளில் சோகம்... சிலையை கரைக்கச் சென்ற வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்!
சென்னை திருவொற்றியூரில் வீட்டில் வைத்து வழிபட்ட சிறிய விநாயகர் சிலையை கடலில் கரைக்கச் சென்ற வாலிபர், கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர் சண்முகபுரத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் (35), தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். விநாயகர் சதுர்த்தியையொட்டி தனது வீட்டில் சிறிய விநாயகர் சிலையை வைத்து வழிபட்ட அவர், பின்னர் நேற்று மாலை அதனை எண்ணூர் பாரதியார் நகர் அருகே உள்ள கடலில் கரைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரை தேடத் தொடங்கினர். அப்போது கடற்கரையில் கமலக்கண்ணனின் மோட்டார் சைக்கிளும் செல்போனும் மட்டும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து எண்ணூர் காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: மாரடைப்பு என நாடகம்.. பிரேதப் பரிசோதனையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை! பின்னணியில் இருந்த மகன், மனைவி... பகீர் சம்பவம்!!!
இதனைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் மற்றும் மீனவர்கள் உதவியுடன் கடலில் தேடுதல் பணி நடைபெற்றது. கமலக்கண்ணனின் உடலை நேற்று காலை மீட்புக்குழுவினர் மீட்டனர். உடலை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற வாலிபர் கடலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! தினமும் 100 பேர் வரை பாதிப்பு – அமைச்சர் எச்சரிக்கை!