அந்தரங்க வீடியோ! பெண் என நினைத்து ஆணுடன் நட்பு! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!
Man arrested in chennai manali who threatening a girl
தொலைபேசி என்பது நம் அனைவர் கையிலும் ஆறாவது விரல் போல் ஆகிவிட்டது. தொலைபேசி இல்லாத நபர்களை பார்ப்பது என்பது கடினமான ஒன்றாகிவிட்டது. ஒருபுறம் இதனால் நன்மைகள் ஏற்பட்டாலும் மறுப்பும் இதனால் ஏற்படும் தீமைகளும் அதிகமாவே உள்ளது.
குறிப்பாக தொலைபேசிகள் மூலம் சமூக வலைத்தளம் என்ற ஒன்றுக்கு இன்றைய இளைய சமுதாயத்தினர் அடிமைகளாக உள்ளனர். இதனால் பல நேரங்களில் பல்வேறு பிரச்சனைகளிலும் சிக்கி தவிக்கின்றனர். அதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம்.
சென்னை மணலியைச் சேர்ந்தவர் மகேஷ். 24 வயதாகும் மகேஷ், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருடன் இன்ஸ்டிராகிராமில் பழகி வந்துள்ளார். நாளடைவில் மகேஷின் பேச்சு சரியில்லை என உணர்ந்த அந்த சிறுமி ஒரு கட்டத்தில் மகேஷை பிளாக் செய்துள்ளார்.
இதனால் பெண்ணின் பெயரில் போலியாக இன்ஸ்டிராகிராம் கணக்கு ஒன்றைத் தொடக்கி, அதன் மூலம் அதே சிறுமியிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் மகேஷ். மேலும், அந்த கணக்கை வைத்து சிறுமி நிர்வாணமாகக் குளிப்பதை வீடியோ காலில் பேசும் அளவு நெருக்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
சிறுமியின் நிர்வாண வீடியோ கிடைத்ததும் தனது உண்மை முகத்தை காட்டிய மகேஷ், தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் இல்லையெனில் நிர்வாண வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன சிறுமி, இதுகுறித்து பெற்றோரிடம் கூற, அவர்கள் காவல் நிலையாயத்தில் புகார் கொடுத்துள்ளனர். அவர்களின் புகாரை அடுத்து காவல் துறையினர் மகேஷை கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.